பள்ளி வரலாறு (Sejarah Sekolah)
- cbd6042tamilcheroh
- May 6, 2022
- 1 min read
Updated: May 15, 2022
பள்ளியின் தோற்றம்
1947 ஆம் ஆண்டு சுமார் 20 மாணவர்களுடன் இப்பள்ளி தன் பயணத்தைத் தொடங்கியது. திரு.மூக்கன் தலைமையில் திரு.வெங்கடாசலம் உதவியுடன் இப்பள்ளி இயங்கியது. சுயமான கட்டிடம் இல்லாத காரணத்தினால் இப்பள்ளி சீரோ மருந்தகத்தில் ஒரு பகுதி கட்டிடத்தில் இயங்கி வந்தது. 1951 ஆம் ஆண்டு திரு.வெங்கடாசலம் தலைமையில் திரு.முனியாண்டி உதவியுடன் இப்பள்ளி, பயணத்தைத் தொடர்ந்தது. மாணவர்களின் எண்ணிக்கை இருபதிலிருந்து முப்பத்தென்றாக அதிகரித்தது. புதிதாக இரண்டு ஆசிரியர்கள் திரு.கணபதி மற்றும் திருமதி கிருஷ்ணாம்மாள் பணியாற்ற துவங்கினர். 1962 ஆம் ஆண்டில் திரு.சின்னையா தலைமையில் முப்பத்து மூன்று மாணவர்கள் பயின்றனர்.
வளர்ச்சி
திரு.வீரப்பன் தலைமையில் மாணவர் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்தது. தொடர்ந்து இவ்வெண்ணிக்கை 108-ஆக திரு.சிவலிங்கம் தலைமையில் அதிகரித்தது. பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கருதி புதிதாக வகுப்பறைகள் அமைக்கப்பட்டன. 1977-இல் 151 மாணவர்கள் கொண்டு இயங்கிய இப்பள்ளிக்குப் பொது ஊழியராக திரு.இராஜகோபால் நியமிக்கப்பட்டார். 1991-இல் முதல் முதலாக கணினி வாங்கப்பட்டது. 1992-இல் பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கை 181 ஆக அதிகரித்ததால் 11 ஆசிரியர்கள் பள்ளியில் பணிபுரிந்தனர். 1993-இல் இப்பள்ளிக்குக் கிடைக்கப்பெற்ற 52,000 ரிங்கிட்டைக் கொண்டு இப்பள்ளி புதுபிக்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டு திரு.சூராசுப்புரமணியம் தலைமையில் பள்ளியில் கணினி வகுப்பு துவங்கப்பட்டது. 2008-ஆம் ஆண்டில் திரு.வேலாயுதம் அவர்களின் பெரும் முயற்சியில் கல்வி அமைச்சிடமிருந்து 14 மில்லியன் பெறப்பட்டு பள்ளிக்கான புதிய கட்டிடம் உருவாக்கப்பட்டது. 2016-ஆம் ஆண்டு கல்வி அமைச்ச்சு வழங்கிய ரிம.120 000.00 மானியத்தின் வழி பள்ளியும் பள்ளி மேலாளர் வாரியமும் இணைந்து பள்ளி பழைய மண்டபத்தைப் புதுப்பித்தனர் மண்டபத்தின் அனைத்து தளவாடப் பொருள்களையும் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் வழங்கி இப்பள்ளி மண்டபத்தை மேலும் செம்மையுறச் செய்தனர்.
தற்போதைய நிலை
2010-ஆம் ஆண்டு திரு.கருணாநிதி அவர்களின் தலைமையின் போது, புதிய கட்டிட நிர்மாணப்பணி முழுமைப்பெற்றது. மேலும் அவரது தலைமையில் பள்ளியில் தளவாடப் பொருள்களுக்காக 2 மில்லியன் கிடைக்கப்பெற்றது. அதே ஆண்டில் யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் அதிரடி வளர்ச்சியின் பலனாக மலேசிய அரசாங்கத்தால் சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் இயங்கும் பள்ளியாக அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதே அங்கீகாரம் மீண்டும் இப்பள்ளிக்கு 2013-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
ஆரம்ப கால பள்ளி சின்னம்

இன்றைய கால பள்ளி சின்னம்





Comments