வகுப்புத் தொகுப்பு (Senarai Nama Kelas)
- cbd6042tamilcheroh
- May 6, 2022
- 1 min read
Updated: May 16, 2022
பாலர் பள்ளி & 1 அன்பு (Prasekolah dan Tahun 1 Kasih Sayang)

ஞானி : வள்ளலார்
அன்பு என்பது தெய்வமானது. உண்மை அன்பு வழியில் நடப்பவர்களுக்கு ஆண்டவனின் துணை எப்பொழுதும் நிலைத்திருக்கும் எனக் கூறினார் வள்ளலார். அதனை கருத்தில் கொண்டே 1-ஆம் ஆண்டிற்கு அன்பு என்றும் பாலர் பள்ளிக்கு வள்ளலார் பாலர் பள்ளி என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
ஆண்டு 2 தயவு (Tahun 2 Prihatin)
ஞானி : அன்னை தெரேசா
உன் மீது அன்பு செலுத்துபவர்களை நேசி. உன் மீது கோபம் கொள்வர்களை அதை விட அதிகமாக நேசி எனத் தயவுள்ளம் கொண்டிருக்க சொன்னார் அன்னை தெரேசா. அவரை ஞானியாகக் கொண்டுள்ளது ஆண்டு 2 தயவு.
ஆண்டு 3 ஒழுக்கம் (Tahun 3 Sopan)
ஞானி: திருவள்ளுவர்
ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பைத் தருவதால், அவ்வொழுக்கம் ஒருவர் உயிரினும் சிறப்பாகப் பேணிகாக்கப்படும் என வலியுறுத்தினார் திருவள்ளுவர். அதனை மனதில் கொண்டு ஆண்டு 3க்கு ஒழுக்கம் எனப் பெயரிடப்பட்டுள்ளது
ஆண்டு 4 பொறுமை (Tahun 4 Sabar)
ஞானி : மகாத்மா காந்தி
வாழ்நாள் முழுவதும் உண்மையையே பேச வேண்டும் என்ற எண்ணத்தோடு அகிம்சை, வாய்மை எனும் உன்னதப் பண்புகளுடன் வாழ்வதே சிறப்பாகும் எனக் கூறினார் காந்தி. எனவே, இவரை ஞானியாகக் கொண்டுள்ள 4-ஆம் ஆண்டு பொறுமை எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஆண்டு 5 வாய்மை (Tahun 5 Jujur)
ஞானி : ஒளவையார்
வாய்மையே வெல்லும் என கூறி அதன் வழி நின்றார் ஒளவையார். இதனை வலியுறுத்தும் வண்ணமே 5ஆம் ஆண்டிற்கு வாய்மை என பெயரிடப்பட்டுள்ளது.
ஆண்டு 6 தூய்மை (Tahun 6 Kesucian Fikiran)

அருட்பெரும் ஜோதி விளக்கு
பூர்ணத்துவத்தைக் குறிக்கும் ஜோதியைக் அடையாளமாகக் கொண்ட இவ்வகுப்பு, மாணவர்கள் 6 ஆண்டு காலம் கடந்து, தூய உள்ளத்துடன் பூர்ணத்துவத்துடன் ஒழுக்கச்சீலர்களாகப் பள்ளியை விட்டு செல்வர் என்பதைக் குறிக்கின்றது.











Comments