சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தனித்துவங்கள் (Keunikan Sekolah)
- cbd6042tamilcheroh
- May 6, 2022
- 1 min read
Updated: May 11, 2022
தோப்புக்கரணம்
மாணவர்கள் தினமும் காலை 3 வகையாகத் தோப்புக்கரணம் போடுவர். இதன் வழி மாணவர்களின் மூளையின் செல்கள் புத்துணர்ச்சியுடன் செயல்பட ஆரம்பிக்கின்றன. ஆகையால், அந்நாளில் மாணவர்கள் கற்றல் கற்பித்தலில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவர்.
பழம் சாப்பிடும் வழக்கம்
மாணவர்கள் தினமும் உணவு உண்ணும் நேரத்திற்கு 30 நிமிடம் முன் பழங்கள் சாப்பிடுவர். இதன் வழி, பழங்களின் முழு ஊட்டச்சத்தைப் பெறுவர். இதனால், செரிமான சக்தி அதிகமாகின்றது.

மிளகு, சீரகம் சாப்பிடும் வழக்கம்
மாணவர்களுக்குக் காலையில் மிளகும், உணவிற்குப் பின் சீரகமும் வழங்கப்படுகிறது. மிளகின் காரத்தன்மை உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதோடு, தொற்று நோய்களையும் தடுகின்றது.சீரகம் உடலினை சீர் படுத்தவும் ஜீரண சக்திக்கும் பெரிதும் துணை புரிகிறது.

திருக்குறள் வகுப்பு
வான்புகழ் வள்ளுவனின் வாக்கை போற்றும் வண்ணம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பள்ளி ஆசிரியர்களுக்குத் திருக்குறள் வகுப்பு நடத்தப்படுகிறது. ஆசிரியர்கள் ஓர் அதிகாரத்தில் ஒரு குறள் எனத் தெரிவு செய்து, அதன் தொடர்பான காணொளியை ஒளிபரப்பி கருத்துகளைப் பகிர்ந்து கொள்வர்.
சமய வகுப்பு
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலையில் மாணவர்கள் மண்டபத்தில் தேவாரம் மற்றும் தலைமையாசிரியரின் சொற்பொழிவு நடைபெறும்.








Comments